தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது சர்தார் பட வெற்றியினால் புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார்.விருமன்,பொன்னியின் செல்வன் பட வெற்றியை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் கார்த்தி.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தற்போது வரை இந்த படம் தொடர்ந்து திரையரங்குகளில் வசூல் சாதனை செய்து வருகிறார்.
#SARDAR BLOCKBUSTER!!#PrincePicture Gifted A Brand New Toyota Lanson To Director #PSMithran & Handed Over By #Karthi 👏🏽♥️
— Saloon Kada Shanmugam (@saloon_kada) November 2, 2022
Biggest Hit & Profit Film in TN🔥 pic.twitter.com/Gjuy2bCtSU
இந்நிலையில் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குநர் P S மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் சுமார் 78 லட்சம் மதிப்புள்ள டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்