தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி.விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளன. இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் மட்டுமே மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக வெளியானது.
பாக்ஸ் ஆபிஸிலும் பொன்னியின் செல்வன் 500 கோடிக்கும் மேல் வசூலித்து கெத்து காட்டியது. அதேபோல், தீபாவளிக்கு ரிலீஸான கார்த்தியின் சர்தார் படமும் பத்தே நாட்களில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது.இந்நிலையில் கார்த்தி நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள ‘ஜப்பான்’ அவரது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
First look of @Karthi_Offl starrer #Japan. Super cool 👌 #Karthi continues to pick roles which are unique and have a good load of entertainment in them. And this is going to be something really different from @Dir_Rajumurugan! #Karthi25 #JapanFirstLook pic.twitter.com/Xtpkc6iLK3
— Siddarth Srinivas (@sidhuwrites) November 14, 2022
ராஜூ முருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை கடந்த வாரம் நடைபெற்றது. கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், தற்போது ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.