தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படம் வெளியானது. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப்படத்தை தொடர்ந்து கடந்த வாரம் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியானது. இந்தப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளி வருகிறார் கார்த்தி. இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.இந்நிலையில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.
இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்தி உளவாளியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சர்தார் திரைப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது. அதன் ட்விட்டர் விமர்சனம் இதோ,சர்தார் படம் சூப்பராக இருப்பதாகவும், கார்த்தி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தின் கதாபாத்திர தேர்வு சூப்பர் என்றும், ஜிவி பிரகாஷின் பாடல்கள் மற்றும் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்து உள்ளதாகவும், குறிப்பாக இண்டர்வல் காட்சி வேறலெவலில் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
#Sardar – Quality stuff with so much data research ! Yet another winner for Annan @karthi_offl !
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 21, 2022
மேலும் கார்த்தியின் நடிப்பு படத்தில் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மித்ரன் இயக்கமும் செம்மையாக இருப்பதாகவும், படத்தில் நிறைய ட்விஸ்ட் இருப்பதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.மேலும் படத்தில் கிளைமேக்ஸ் காட்சி அல்டிமேட்டாக இருப்பதாகவும் விமர்சனங்கள் இணைந்துள்ளன.இதனை வைத்து பார்க்கையில் சர்தார் திரைப்படம் கார்த்திக்கு வெற்றியை தேடி தந்துள்ளது என்று தெரிகின்றது
#Sardar Blockbuster Material, 🥳🔥🔥🔥 Sambavam..
— Manibharathi Selvaraj (@smbmanibharathi) October 21, 2022
One of the Best From @Karthi_Offl anna
Complete Package from @psmithran with Social Message
Vera Mariii Vera Maaariiiiii…. 🔥🔥
Silent Sambavam..#SardarDeepavali