நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனித்துவமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்தார்’.
இந்த படத்தை ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரெஜிஷா விஜயன் என இரு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.இந்த படத்தில் வில்லனாக சங்கி பாண்டே நடித்து வருகிறார். இதுதவிர நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தைபிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் இப்படதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.இந்த படம் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் ஏறு மயிலேறி என்ற நாட்டுப்புற பாடல் தயாராகி வருகிறது. இதில் நடிகர் கார்த்தி பின்னணி பாடியுள்ளார். எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.மேலும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது