தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பற்றி கேள்வி கேட்டபோது சற்று காட்டமாக பேசினார் கஸ்தூரி ராஜா. பிரபல இயக்குநரான கஸ்தூரி ராஜாவின் மகன்கள் இயக்குநர் செல்வராகவன் மற்றும் தனுஷ். இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.மேலும் இப்படத்தில் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நானே வருவேன்’ திரைப்படம் வரும் 29 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.இந்நிலையில் நடிகர் தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். நானே வருவேன் திரைப்படம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான கஸ்தூரி ராஜா, இது நமக்கு சம்மந்தம் இல்லாத கேள்வி. இதை நீங்கள் கேட்கக்கூடாது. இதனால்தான் நான் மீடியாவை சந்திப்பது இல்லை. அத்து மீறி கேள்வி கேட்குறீங்க என கோபப்பட்டார். பின்னர் தான் கோபப்பட்டதற்காக மன்னிப்பும் கேட்டார் கஸ்தூரி ராஜா.இந்நிலையில் நாளை மறுநாள் நானே வருவேன் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.