Skygain News

ரஜினியை தாக்கி பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட பிரபல நடிகர்..!

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இதையடுத்து ரஜினி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கின்றார்.

ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் ரஜினி. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்க ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.

இதையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்நிலையில் பிரபல நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ‘ கமல் ஹாசன் செய்த சாதனைகள் பல, அன்பே சிவம், மைக்கல் மதன காமராஜ், விருமாண்டி என பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை அடுத்த 10 வருடத்திற்கு பிறகு அனைவரும் ரஜினியை மறந்துவிடுவார்கள். ஆனால், கமல் ஹாசன் அப்படி கிடையாது ‘ என்று கூறியுள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது சமூக வலைத்தளத்தில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More