உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகின்றார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகின்றார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்த ‘அண்ணாத்த’ மற்றும் செல்வராகவனுடன் நடித்த ‘சாணி காகிதம்’ ஆகிய படங்கள் வெளியானது.
இதை தொடர்ந்து தமிழில் நடிகர் உதயநிதிக்கு ஜோடியாக ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக இந்த படத்தின் பணிகள் நடந்து வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் இந்த வருட ஓணம் பண்டிகையை படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் நாட்டில் பிறந்தவராக இருந்தாலும், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். நேற்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையை, கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் கொண்டாடாமல், படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
மாமன்னன் படக்குழுவுடன் வடிவேலுவும் அந்த புகைப்படத்தில் இருக்கின்றார்.அவரை பார்த்த ரசிகர்கள் குஷியாக அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.