தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஈசாந்திமங்கலம் ஊராட்சி வரகுணமங்கலம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் முற்றிலும் விவசாயத்தை நம்பியே இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் .
இந்த ஊரை சுற்றிலும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. தற்போது இந்த விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக விற்ப்பனண செய்வதற்க்கு பல்வேறு வழிகளில் வீட்டுமனை விற்ப்பனணயாளர்கள் நிலத்தரகர்கள் மூலம் இந்த ஊரின் அருகாமையில் உள்ள விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி விவசாய நிலத்தில் கிராவல் மண் நிரப்புவதற்க்காக கணரக வாகனங்களில் குடியிறுப்பு பகுதி வழியாக கொண்டு சென்று காங்கிரட் தெருக்கள் மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் வாகனங்களை சிறைபிடித்துள்ளனர் வாகனங்களில் கொண்டு சென்ற கிராவல் மண்களை ஊரின் மையப்பகுதியில் தட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந் நிலையில் வீட்டு மனை விற்ப்பனையாளர்கள் மற்றும் நில தரகர்கள் ஒன்றுசேர்ந்து மாற்றுவழிக்காக பல ஏக்கர் விவசாயத்திற்க்கு : பயன்பெறும் நீர் பாசன கால்வாயை அடைத்து அருகே உள்ள பொதுப்பணித்துறை க்கு சொந்தமான பல தென்னை மரம், மற்றும் பூவரசு, புண்னை மரங்களை இரவோடு இரவாக வெட்டி கடத்த முயன்றுள்ளனர் பொதுமக்கள் சுற்றி வழைத்த உடன் வெட்டிய மரங்களை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர் .
இதுகுறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அழிக்கப்பட்டுள்ளது இதே நிலை நீடித்தால் குமரி மாவட்டத்தில் விவசாயம் விரைவில் அழிந்து விடும் விவசாயத்தை நம்பி வாழும் தங்களுடைய வாழ்வாதாரம் கேள்வி குறி ஆகும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி கூறினர்