இந்திய அணி T20 உலகக்கோப்பையில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது. இதையடுத்து இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் போட்டி நடைபெறும் சிட்னி களம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான ஒன்று என்பதால் அசால்டாக சிக்ஸர்களை விளாசலாம். ஆனால் ஏமாற்றமாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் நிதான தொடக்கத்தை கொடுத்தனர்.எப்படியும் கியரை மாற்றுவார்கள் என்று எண்ணிய நேரத்தில் தான் கே.எல்.ராகுலுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
3வது ஓவரில் வான் மீகேரென் வீசிய ஃபுல் டெலிவெரி பந்தை ராகுல் ஃப்ளிக் ஷாட் ஆட முயன்று எல்.பி.டபள்யூ ஆனார். அம்பயர் அவுட் கொடுத்துவிட்ட போதும், கே.எல்.ராகுலால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நேரடியாக ரோகித்திடம் சென்ற கே.எல்.ராகுல், பந்து ஸ்டம்பிற்கு வெளியே சென்றதா என கேட்டார்.
அதற்கு ரோகித் சர்மாவும் துணிச்சலுடன் டி.ஆர்.எஸ் எடுத்துப்பார் எனக்கூறினார். எனினும் தொடர்ந்து சந்தேகத்துடனே இருந்த கே.எல்.ராகுல் கடைசி வரை 3வது நடுவருக்கு பரிந்துரைக்கவில்லை. இதனால் கே.எல்.ராகுல் 12 பந்துகளில் வெறும் 9 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார்.

ஆனால் உண்மையில் கே.எல்.ராகுலின் முடிவு தவறான ஒன்று. அந்த பந்து லெக் ஸ்டம்ப்பை விட்டு வெளியே சென்றது தெரியவந்துள்ளது.ஒருவேளை கே,எல் ராகுல் ரிவியூ எடுத்திருந்தால் அவர் ஆட்டம் இழந்திருக்க நேரிட்டிருக்காது.இந்நிலையில் கே.எல் ராகுல் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருவது குறிப்பிடத்தக்கது