ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக கூட்டணி வெற்றிபெறும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மேலும் அமைச்சர் கே.என்.நேருவின் கோபத்தை பற்றி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பலமுறை பேசி இருக்கிறார். அந்தக் கோபம் இன்னும் நிற்கவில்லை. பல நேரங்களில் வைரலாக போகிறது. பொறுமை எல்லாம் ஓரளவுக்கு தான். அதேபோல் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் என்பதால், எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்று நினைக்காதீர்கள். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஈரோடு மாவட்டத்திற்கு எதையும் அதிமுக செய்யவில்லை என்று தெரிவித்தார்.
