பாகுபலி படம் மூலம் பாப்புலர் ஆன நடிகர் பிரபாஸ், அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.இந்நிலையில் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன், சயிஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஆதிபுருஷ் படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.
இந்நிலையில் அந்த படத்தில் நடித்தபோது பிரபாஸுக்கும், க்ரிட்டி சனோனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் படப்பிடிப்பு முடிவதற்குள் க்ரிட்டியிம் ப்ரொபோஸ் செய்தார் பிரபாஸ். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இதுபற்றி தற்போது க்ரிதி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தது என்னவென்றால் ,இது காதலோ, விளம்பரமோ இல்லை.. ரியாலிட்டி நிகழ்ச்சியில் எங்களின் Bhediya கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.

அவர் ஜாலியாக கூறியதால் பல வதந்திகள் பரவியிருக்கிறது. ஏதாவது இணையதளம் என் திருமண தேதியை அறிவிக்கும் முன்பு நானே விளக்கம் அளிக்கிறேன். வதந்திகள் ஆதாரமற்றவை என்றார்.இதன் மூலம் இவர்கள் இருவரும் காதலிக்கவில்லை என்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது