Skygain News

150கிலோ எடையுள்ள இரண்டு லாரி டயர்களை தலைக்குமேல் தூக்கி நடந்த குமரியின் இரும்பு மனிதன்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன். தமிழகத்தின் இரும்பு மனிதனான இவர், உடல்வலு பயிற்சியாளராக இருந்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில், 2020-ம் ஆண்டுக்கான இரும்பு மனிதன் போட்டியில் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தார்.

கண்ணன் 13.50 டன் எடை கொண்ட லாரியை ஒருபக்கக் கயிறு மூலம் 111 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை நிகழ்த்தினார்.நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்கா வீரரின் சவாலை ஏற்று 20 கிலோ எடை கொண்ட இரும்பு குண்டை ஒற்றை கையால் தூக்கி சாதனை படைத்ததுடன் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி உள்ளார்.

இந்த வழியில் கண்ணன் சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள பல்வேறு உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அதன் ஒருபகுதியாக இன்று தாமரைகுட்டிவிளை பகுதியில் ரோட்டில் 150 கிலோ எடையுள்ள இரண்டு லாரி டயர்களை தலைக்குமேல் தூக்கி நடந்துள்ளார் இதை அப்பகுதியில் சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பரவ செய்துள்ளனர் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.