Skygain News

ராணிப்பேட்டை அருகே கொட்டும் கனமழையை பொறுப்பெடுத்தாமல் பக்தியுடன் கும்ப அபிஷேக விழாவில் பங்கேற்ற திரளான பக்தர்கள்…

ராணிப்பேட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அருள்பாலிக்கும் ஸ்ரீ சபரி சாஸ்தா பூஜா சமிதியின் அருள்மிகு ஐயப்ப சுவாமி ஆலயத்தில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது

இந்த கும்பாபிஷேக விழாவில் ராணிப்பேட்டை அருகே இருக்கும் பாலாற்ற கரையிலிருந்து 101 குடங்களில் புண்ணிய தளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஜலத்தை மேல தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டு பின்னர் கனமழையை பொறுப்பெடுத்தாமல் கோவில் மேல் இருக்கும் கலசத்திற்கு பூஜை செய்யப்பட்டு கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் விழாவானது நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இந்த மஹா கும்பாபிஷேக விழாவின்போது திரளான பக்தர்கள் கொட்டும் மழையிலும் கூட பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷங்களை எழுப்பி பக்தி வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் கும்பாபிஷேக விழாவின்போது வழங்கப்பட்ட அன்னதானத்தினை பொதுமக்கள் குடைகளை கையில் ஏந்தியவாறு அன்னதானத்தை பெற்று உண்டு ஐயப்ப சுவாமி அருள் பெற்று சென்றனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More