விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இந்தப்படத்தின் ‘வாரிசு’ தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்நிலையில் தற்போது தான் ‘வாரிசு’ படத்தில் நடிக்கவில்லை என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை சந்தித்தபோது தான் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு தற்போது குஷ்புவின் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது