கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆரியநத்தம் மேட்டுப்பாளையம் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே உள்ள நரியின் ஓடை பகுதியில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அந்த பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது இதனால் தலை வாழும் தண்ணீரில் மூழ்கியுள்ளது .
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆரியநத்தம் மேட்டுப்பாளையம் ஆலடி பாலக்கொல்லை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விருத்தாசலம் செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சென்றுவரும் நிலையில் தற்போது தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது .
மேலும் விருத்தாசலம் அருகே உள்ள வடவாடி பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில் அந்த வாகனங்கள் மேட்டுப்பாளையம் வழியாக தரைபாலத்தை கடந்து உளுந்தூர்பேட்டை நகரத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்லும் பட்சத்தில் அந்தப் பகுதியில் போக்குவரத்தில் நிறுத்தம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் வாகன ஓட்டிகள் எந்தவிதமான விபத்தும் ஏற்படாமல் செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் முன்னிலையில் சாலை பணியாளர்கள் மண் முட்டையில் சிவப்பு கொடி கட்டி வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.