Skygain News

தேன் மற்றும் பப்பாளியின் பல நண்மைகளை காண்போம்..!

பப்பாளி பழம் பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல சுவையையும் தரகூடியது. இதுமட்டுமல்லாமல் அதிக நார் சத்து இருப்பதால் நமக்கு மல சிக்கல் இல்லாமல் வைத்துக்கொள்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிக நன்மைகளை தர கூடியது மற்றும் கொழுப்பை குறைத்து நமக்கு இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கிறது. மேலும் பாஸ்ட் புட் சாப்பிட்டு குடலை கெடுத்து கொண்டோருக்கு செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.

சிலர் வாலிபத்தில் இருப்பது போல எப்போதும் இளமையாய் இருக்க பல அழகு நிலையத்திற்கு சென்று பணத்தை செலவு செய்கின்றனர். இவர்களுக்கு முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கம் காரணமாக தங்களுக்கு வயதான தோற்றம் உண்டாவதாக எண்ணி வருந்துகின்றனர். இத்தகையவர்கள் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழ் போல் பிசைந்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் போதும் முகம் இளமையாய் எப்போதும் காட்சியளிக்கும்

சிலருக்கு நரம்பு தளர்ச்சி காரணமாக பல மன நோய்கள் ஏற்பட்டு அவதி பட்டு வருகின்றனர். இப்படி மனப்பதற்றம் அதிகமுள்ளவர்களும், உடலில் நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, நரம்பு தளர்ச்சி பிரச்னையை போக்க தினமும் காலையில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறைபாடு சீக்கிரத்திலேயே நீங்கி உடல் ,மனம் இரண்டும் ஆரோக்கியமாய் இருக்க பப்பாளி வழி செய்கிறது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More