விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குற்றச்சன்பங்களை தடுக்கும் விதத்தில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆதிச்சனூர் கிராம எல்லையில் ஆற்றின் கரையோரமாக சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவல் பேரில் அங்கு சோதனை செய்ததில் 500 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் நான்கு 200 லிட்டர் பேரலில் சாராயபுரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன மேலும் 25 லிட்டர் சாராயம் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அரகண்டநல்லூர் போலீசார் அங்கேயே கொட்டி தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.
மேலும் விசாரணை மேற்கொண்டதில் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்கின்ற பட்டப் பெயராக அழைக்கப்படும் வக்கீல் ஏழுமலை என்பவர் சாராய ஊழல் வைத்தது தெரியவந்து அடுத்து வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறது.