Skygain News

தளபதி 67 எப்போது ? லோகேஷ் சொன்ன தகவல்..!

விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.தமன் இசையமைக்கும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது.

மேலும் இப்படத்தில் விஜய் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், விஜய் படங்களிலிருந்து இப்படம் சற்று மாறுபட்டு இருக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன.இந்நிலையில் அடுத்ததாக விஜய் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

இதனை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்தார். ஆனால் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.இருப்பினும் நாளுக்கு நாள் தளபதி 67 பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகின்றது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் வெளியாகும் என சொல்லப்பட்டது. இதையடுத்து அடுத்த மாதம் வாரிசு படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிகின்றது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.