Skygain News

நடிகராக அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்..எந்த படத்தில் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ்.முதல் படமே வெற்றி படம் என்

பதால் ரசிகர்களின் கவனம் லோகேஷ் கனகராஜ் மீது திரும்பியது.அதைத்தொடர்ந்து கார்த்தியின் கைதி படத்தின் மூலம் வெற்றிகண்டு அடுத்தகட்டத்துக்கு சென்றார் லோகேஷ்.அதைதொர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற்ற லோகேஷ் கமலின் விக்ரம் படத்தை எடுத்து இந்திய அளவில் பிரபலமான இயக்குனரானார்.அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். பிரமாண்ட நட்சத்திரங்களுடன் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகராகவும் அவதாரம் எடுக்கவுள்ளார். ஆம், கோகுல் இயக்கத்தில் ஆர். ஜே. பாலாஜி நடிக்கவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்கப்போகிறாராம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.