விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து விஜய்யை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி 67’ ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இந்தப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணியில் லோகேஷ் பிசியாக ஈடுபட்டு வருகிறார். இந்தப்படத்திற்கான ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு மூணாறு பகுதியில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் முதற்கட்ட படப்பிடிப்பை மும்பையின் lonavala இடத்தில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனையடுத்து விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.