Skygain News

மளிகை கடையில் ஓட்டை போட்டு கொள்ளை – நாகர்கோவிலில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் ஜான் செல்வம் என்பவர் சுமார் 7 வருடங்களாக பலசரக்கு கடை நடத்தி வருகிறார் . இன்று காலையில் இவர் வழக்கம்போல் கடையை திறந்து பார்த்த பொழுது கடையின் பின்பக்க சுவர் துளையிடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

இதையடுத்து உடனடியாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்து பார்த்தபோது ஜான் செல்வோம் அவரின் கடையின் அடுத்த கடையான வெல்டிங் கடையில் இருந்த டிரில்லிங் மிஷின் மற்றும் கட்டிங் மெஷினை பயன்படுத்தி ஜான் செல்வத்தின் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து ரூபாய் 20000 ரொக்கம் மற்றும் ரூபாய் 20000 மதிப்பிலான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது . இதனை அடுத்து அருகில் இருந்த வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More