கோமாளி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படமாக ‘லவ் டுடே’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் அவர் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமான இதில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சத்யராஜ், யோகிபாபு, ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. இன்றைய கால இளைஞர்களின் காதலை மையமாக வைத்து உருவான இந்தப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் ‘லவ் டுடே’ படம் தற்போது 50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பத்து மடங்கு வசூல் செய்துள்ளது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரதீப்பின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.