ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் வெற்றிகண்டவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.அதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தனது இரண்டாவது படைப்பாக இயக்கி நடித்துள்ள ‘லவ் டுடே’ படம் நேற்றைய தினம் வெளியானது.இப்படத்தின் மூலம் அவர் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
ரொமாண்டிக் காமெடி திரைப்படமான இதில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சத்யராஜ், யோகிபாபு, ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.

முதல் ஷோவில் இருந்து இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இன்றைய காதலர்கள் குறித்து கலகலப்பாக இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப் இந்நிலையில் ‘லவ் டுடே’ படத்திற்கு தமிழகத்தில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழகத்தில் முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலுக்கு இணையாக முதல் நாளில் 3 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன