சமீபத்தில் வெளியாகிய லவ் டுடே திரைப்படம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இந்த காலத்து இளைஞர்களின் மனதை கவரும் விதமாக அண்மையில் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே.
இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்தே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி, அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக இவானா, முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இந்நிலையில், இப்படம் வெளிவந்த இதுவரை உலகளவில் ரூ. 57 கோடிகளை வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 47 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது லவ் டுடே திரைப்படம்.