தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் 121வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு. மதுரை ஆவின் அருகே உள்ள மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணரின் சிலைக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கயிலைச்செல்வம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
