தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மகேஷ் பாபுவின் தாய் இன்று அதிகாலை காலமானார். அண்மை காலமாகவே அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்திரா தேவி காலமானார். அவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு கடந்த ஆண்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Telugu super star #MaheshBabu mother passed away
— RJ Raja (@rajaduraikannan) September 28, 2022
RIP pic.twitter.com/WkqVMqooj0
நண்பர்கள், ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வசதியாக இந்திரா தேவியின் உடல் இன்று காலை 9 மணிக்கு பத்மாலயா ஸ்டுடியோஸுக்கு கொண்டு வரப்பட்டது. ஜுபிளி ஹில்ஸில் அவரின் இறுதிச்சடங்கு இன்று நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தாயை பிரிந்த சோகத்தில் வாடும் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்