பிக் பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. கடந்த ஐந்து வருடங்களாக தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது ஆறாவது சீசன் கோலாகலமாக கடந்த மாதம் துவங்கப்பட்டது.
இந்நிலையில் இதுவரை ஜி.பி.முத்து, அசல், ஷாந்தி, ஷெரினா, மஹேஸ்வரி ஆகியோர் இந்த போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.இதில் கடந்த வாரம் மஹேஸ்வரி போட்டியிலிருந்து வெளியேறினார்.
அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தார், இப்போது பேட்டி கொடுக்கவும் ஆரம்பித்துள்ளார்.அப்படி ஒரு பேட்டியில், விக்ரமன் கண்டிப்பாக நூறு சதவீதம் இறுதி வரை வருவார்.

தனா மற்றும் அசீம் இல்லாத ஒன்று விக்ரமிடம் இருக்கிறது என்றால் அது சரியான நிலைப்பாடு தான். விக்ரமன் கண்டிப்பாக பலமான போட்டியாளர் என கூறியுள்ளார்.