கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் சபரிமலை சீசன் இருப்பதால் அதிகமான பக்தர்களும் இந்த பாதை வழியாக செல்கின்றனர். இதனால் புளியரை சோதனைச் சாவடியில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் தமிழக – கேரள எல்லை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.