மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த மாதம் செப்டம்பர் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீசாகி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், தொடர்ந்து திரையரங்குகளில் சக்சஸ்புல்லாக ஓடி வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படம் கமலின் விக்ரம் பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது. கமல் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் ரிலீசாகி மொத்தமாக ரூ.426 கோடி வசூலித்திருந்தது.

தற்போது பொன்னியின் செல்வன் அதனை முறியடித்து அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. முதலிடத்தில் ரஜினியின் 2.0 திரைப்படம் உள்ளது. இப்படம் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.