இஞ்சியை காய வைத்தால் வரும் பொருள்தான் சுக்கு. இந்த சுக்கு மூலம் நம் உடலில் உள்ள நிறைய நோய்களை குணப்படுத்த முடியும். முக்கியமாக இன்னும் சில கிராமங்களில் பாட்டிகள் இந்த சுக்குவை அரைத்து வயிறு மந்தம் ,சளி தொல்லையுள்ள குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமாகும். மேலும் சிலருக்கு அதிக கார உணவுகள் உண்ணுவதால் வயிறு எரிச்சல் ஏற்பட்டால், கரும்பு சாறுடன் இந்த சுக்கை சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அந்த நோய் குணமாகிவிடும்.

மேலும் பல நன்மைகள் கொண்டிருக்கும் இந்த சுக்கு பற்றி காண்போம்
உடல் பருமனால் அவதிப்படுவோரின் உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் அரைத்து வைத்த சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, தொப்பையின் அளவை குறைத்து, உங்களை ஸ்லிம்மாக வைக்க உதவும்.

மேலும் சிலர் மூட்டு வலி வந்து நடக்கவே சிரமப்படுவார்கள் உள்ளார். அவர்கள் எல்லாம் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து பிறகு அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுவலி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் . மேலும் இருமலுக்கு சுக்கு தூள் சிறந்த நிவாரணியாகும். இதை சுக்கு டீ கூட போட்டு குடிக்கலாம்.