Skygain News

மிரட்டல் விடுத்த மேயர் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்..!

திமுக கூட்டத்தில் மிரட்டல் தொனியில் பேசிய நாகர்கோவில் மேயர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பாஜகவினர் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் மாநகர திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், கழுத்தில் கையை வைத்து மிரட்டலாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மேயரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அவர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் கோட்டார் காவல் நிலையத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் திரண்டு முற்றுகையிட்டனர். மேலும் நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ காந்தி, கோட்டார் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ராமர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருக்கும் மகேஷ், பொதுக் கூட்டத்தில் பாஜகவினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும், மேயர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாகர்கோவிலில் பாஜக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More