விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர். மேலும் மாதந்தோறும் இக் கோயிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற உண்டியலில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஆடி மாத உண்டியல் எண்ணிக்கை கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் 88 லட்சத்தி 92 ஆயிரத்து 464 ரூபாய் மற்றும் 367 கிராம் தங்கமும் , 845 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
உண்டியல் எண்ணிக்கையின்போது இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் உதவி ஆணையர் ஜீவானந்தம்,விழுப்புரம் விஜயராணி,கள்ளக்குறிச்சி சிவாகரன், அறங்காவலர்கள் குழு தலைவர் சந்தானம்,மேலாளர் மணி மற்றும் கோயில் ஊழியர்கள் இருந்தனர்.

