ஃபேஸ்புக் போலவே இன்ஸ்டகிராம் பக்கத்திலும் இனி பழைய நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் வசதி வரப்போகிறது. ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதை அதிகமாக பயன்படுத்தாவிட்டாலும், நீங்கள் ஏற்கெனவே பதிவிட்ட விஷயங்களை திடீரென நினைவுபடுத்தி ஃபேஸ்புக்கில் தகவல் வருவதைக் கண்டிருக்கலாம். இதே நாளில் நீங்கள் பதிவு செய்தது என்ற வகையில் நினைவூட்டல் செய்தி வருவது வழக்கம். ஃபேஸ்புக்கில் கண்டிருக்கக்கூடிய இந்த வசதி, இன்ஸ்டகிராமிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகளில் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
