தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதையடுத்து குமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சின்ன முட்டம் துறைமுகத்தில் தங்குதலமாக கொண்டு 350-க்கு மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்,அவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை, அதேபோல் குளச்சல் துறைமுகம் தேங்காய் பட்டணம் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படங்கள் மற்றும் விசைப்படகுகள் உள்ளன அவைகளும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை, மீனவர்கள் கடற்கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர் மேலும் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன் பிடிக்க போகவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.