காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் காவல் நிலையம் அருகே மற்றும் மணிமங்கலம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை ஓரத்தில் மணிமங்கலம் ஏரியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மண் திருட்டு நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளுக்கு மண் நிரப்பும் வீடியோ அப்பகுதி மக்களால் எடுக்கப்பட்டு தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இந்த கனிம வள கொள்ளை மணிமங்கலம் காவல் நிலையம் மிக அருகில் நடைபெறுவதால் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை துணையோடு நடைபெற்று வருகிறதா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் மணிமங்கலம் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப் பெருந்தகையின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.