Skygain News

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மாவட்டம் லால்குடி கிளை நூலகத்தில், மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்து, நூலகத்தை பார்வையிட்டு, நூலகங்களில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 3 நூலகர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்…

இதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி மெய்நிகர் நூலகத்தை அமைக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை இன்று செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் லால்குடியில் முதல்முறையாக தொடங்கி வைத்திருக்கிறோம்.

இது போன்ற புதிது புதிதான தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும், இது போன்ற நிகழ்வு மூலமாக ஒரு லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள், மேலும் 26 நூலகங்கள் மெய் நிகர் திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட உள்ளது, குறிப்பாக மாணவர்கள் புத்தகத்தை படிக்க சொல்லுவதை காட்டிலும் இது போன்ற 360 டிகிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படிக்கும் பொழுது இன்னும் எளிமையாக புரிந்து கொள்ளவும் படிக்கவும் அவர்களால் முடியும் என்ற நம்பிக்கையில் தான் இது போன்ற நிகழ்வை உருவாக்கியுள்ளோம்.

மாணவ செல்வங்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் அமைத்து வருகிறார். அந்த அடிப்படையில் தான் வளமான சமுதாயத்தையும், மாணவர்களையும் உருவாக்க முடியும் எனவே நாம் படித்து வரும் அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேர்த்துக் கொண்டு முன்னேற வேண்டும். தமிழ்நாட்டில் 26 நூலகங்கள் தொடங்கப்படவுள்ளது. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More