75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு எட்டயபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகைதந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் .
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை யொட்டி நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ன கொடியை வீடு வீடாக ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேத்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். எனவே மக்கள் அனைவரும் வருகிற 13-ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும்.
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.
போதை பழக்கத்தை இரும்புகரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும். அதேபோல் ஊழலையையும் ஒழிப்பதற்கு தமிழக அரசு சர்வாதிகாரியாக செயல்பட வேண்டும்.
அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பல லட்சம் இளைஞர்கள் தானாக முன் பதிவு செய்து வருகிறார்கள் என்றார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்