வேலூர் மாவட்டம்,அடுக்கம் பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.,சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கின்றனரா என கேட்டறிந்தார் .

இதையடுத்து மருத்துவமனையில் உயிரி மருத்துவ கழிவுகளை எதையும் வைத்திருக்க கூடாது அவ்வாறு இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிட வேண்டுமெனவும் மேலும் பிளாஸ்டிக் கழிவுகளையும் மருத்துவமனையில் அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்