புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன்
எண்ணூர் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் மாசு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . பாரத் பெட்ரோல் நிலையமாக இருந்தாலும் சரி சிபிசிஎல் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையமாக இருந்தாலும் சரி மாசு ஏற்படக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
மாசு எந்த அளவில் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் .
அதிக ஒலி மாசு எழுப்பக்கூடிய வாகனங்கள் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்
அடுத்த கல்வியாண்டில் சிலம்பம் குறித்த பாடத்திட்டம் கண்டிப்பாக சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்படும்
சிலம்பக்கலை தமிழர்களுக்கு சொந்தமானது அதனை ஊக்குவிப்பது மட்டுமல்ல மீட்டெடுக்கும் வகையில் நூறு சிலம்ப ஆசான்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
மாவட்ட அளவில், மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு நிதி பற்றாக்குறை காரணமாக செல்ல முடியாத விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சி அளிப்பதற்கு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்தின் கீழ் நிதிகள் வழங்குவதற்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டத்தின் கீழ் சர்வதேச அளவில் கலந்து கொள்ளும் வகையில் விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்
உயர்நீதிமன்ற உத்தரவுபடி கபடி விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு பரிசோதனை வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும்
கபடி விளையாட்டு வீரர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதற்கான பரிசீலனையும் தமிழக அரசிடம் உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா புதுக்கோட்டை நகர மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத் அலி, நகர் மன்ற உறுப்பினர் எம் எம் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.