விழுப்புரத்தில் கொட்டும் மழை நிலையம் அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மழை நீர் வடிகால் வாய்க்காலை ஆய்வு செய்தனர் .ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடிக்கு நரிக்குறவர் சமூக மக்கள் பாசிமாலை அணிவித்து அன்பினை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.
விழுப்புரத்தில் கடந்த மூன்று தினங்களாக மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது மழைநீர் நகருக்குள் தேங்காத அளவிற்கு மழைநீர் வெளியே செல்லக்கூடிய கோலியனூரான் வாய்க்கால் ,ஜேசிபி எந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை கொட்டும் மழையிலும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பணியை துரிதப்படுத்தினார்.
இதே போன்று மணி நகர், திரு.வி.கா வீதி, மணி நகர் , திருச்சி ரோடு, சுதாகர் நகர் மெயின் ரோடு ,புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கொட்டும் மழையிலும் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அப்பொழுது புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் பொன்முடிக்கு நரிக்குறவர் சமூக மக்கள் பாசி மாலை அணிவித்து அன்பை வெளிப்படுத்தினர் இச் சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.