ஆந்திர மாநிலத்தில் தற்போது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போதைய முதல்வராக உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலா கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார் ரோஜா.

இந்நிலையில் திருப்பதியில் சுற்றுலா துறையின் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்து. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா பங்கேற்று நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார். மேடையில் மாணவிகள் நடனம் ஆடியதை கைதட்டி உற்சாகமாக ரசித்துக் கொண்டிருந்த ரோஜா திடீரென்று மேடையில் ஏறி மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடினார்.
அமைச்சர் ரோஜா மாணவிகளுடன் நடனம் ஆடிய வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.