சங்கராபுரம் அருகே உள்ள ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் முழுமையாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்.க. கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் குமரகுருபரன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர், சிவக்குமார், உதவி ஆணையர், சிவாகரன், திருக்கோயில் செயல் அலுவலர் அருள், மற்றும் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.