முதுகு வலி என்பது மனித வாழ்வில் வரும் சராசரி வழியாகும். இந்த வலி சிலருக்கு ஓரிரு நாட்களில் குணமடைந்து விடும் ஆனால் சிலருக்கு அந்த முதுகு வலி நிரந்தரமாக தங்கி விடும். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது தவறான முறையில் அமர்வது, அதிக பணி சுமை மற்றும் மன அழுத்தம், முதுமை தொற்றுநோய்க் கிருமிகள், காயங்கள் மற்றும் கட்டிகள் போன்றவற்றை காரணமாக கூறலாம். இதற்கு ஒரு பவுடர் தயாரிக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து முளைகட்டிய ராகி மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதே கடாயில் கருப்பு எள்ளு போட்டு படபடவென பொறியும் அளவுக்கு வறுத்து ஆற வைக்கவும். அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த இந்த கருப்பு எள்ளு, பாதாம் பருப்பு, சோம்பு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு பொடியாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் ராகிமாவோடு கொட்டி நன்றாக ஒரு கரண்டியை வைத்து கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் போதும் நமக்கு தேவையான முதுகு வலியை போக்கும் இந்த ஹெல்த் பவுடர் தயார்.

ஒரு டம்ளர் சூடான பாலில் நாம் வைத்திருக்கும் இந்த பவுடரை 1 டேபிள் ஸ்பூன்கொட்டி ,நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் முதுகு வலி வந்த வழியே போய் விடும்.