Skygain News

அவரை பார்த்தால் பயமாக இருக்கின்றது..மொயீன் அலி ஓபன் டாக்..!

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டி பற்றி மொயீன் அலி பேசியதாவது ,சூரியகுமார் ஆட்டத்தை பார்த்தால் பயமாக இருக்கின்றது.சொந்த மண்ணிலேயே எனது பவுலிங்கை அவர் நாசம் செய்துவிட்டார். நல்ல வேலையாக கடும் முயற்சி செய்து அவரை அவுட்டாக்கினோம். அவருடைய சில ஷாட்கள் என் வாழ்விலேயே நான் பார்த்த சிறந்த ஷாட்களாகும்.

Suryakumar Yadav, of India, hits 4 during the third T20I match between West Indies and India at Warner Park in Basseterre, Saint Kitts and Nevis, on August 2, 2022. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

என்னிடம் யாராவது, நீ யாருக்கு பந்துவீசக்கூடாது எனக்கேட்டால், நான் சூர்யகுமார் யாதவை தான் முதலில் சொல்வேன். அவர் சிறப்பாக விளையாடும் போது பலவீனத்தை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. எங்களை சொந்த மண்ணிலேயே துவம்சம் செய்த சூர்யகுமார்,இங்கு என்ன செய்யப்போகிறார் எனத்தெரியவில்லை என மொயீன் அலி புலம்பினார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.