தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்களை ஆட்கொண்டுள்ள விஜய் வம்சியின் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கின்றார் விஜய். இந்நிலையில் தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை இயக்க பல இயக்குனர்கள் தவம் இருக்கின்றனர்.
ஆரம்பகாலகட்டத்தில் முதல் பட இயக்குனருக்கு அதிகமாக வாய்ப்பளித்த விஜய் அதன் பிறகு அனுபவமுள்ள இயக்குனர்களின் படங்களில் நடித்தார். பின்பு ட்ரெண்டிற்கு ஏற்றாற்போல தற்போது இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றார் விஜய். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மோகன் ராஜா விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய்யை வைத்து வேலாயுதம் என்ற ஹிட் படத்தை இயக்கிய மோகன் ராஜா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து காட்பாதர் படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மோகன் ராஜா, இடைப்பட்ட காலத்தில் விஜய்யை இயக்க வாய்ப்பு வந்ததாகவும், அப்போது தன்னிடம் கதை இல்லாததால் அந்த வாய்ப்பு பறிபோனதாகவும் கூறினார்.
மேலும் கொரோனா காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு கதையை எழுதி வைத்துள்ளாராம் மோகன் ராஜா.எனவே விரைவில் விஜய்யை இயக்குவேன் என உறுதியாக கூறியுள்ளார் மோகன் ராஜா.