Skygain News

eps கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது!

சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், கட்சி கொடியை ஏந்திய படி ஊர்வலமாக சென்று அவினாசி சாலையில் உள்ள அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினரை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் முழுக்கங்களை எழுப்பினர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, வாகனங்கள் மூலம் அழைத்துச் சென்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More