Skygain News

புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி கைதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட 80 க்கும் மேற்பட்டோர் கைது

புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி கைதைக் கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 80 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பாக அதன் நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள திரு.கிருஷ்ணசாமி மதுரையில் இருந்து விருதுநகர் வந்து கொண்டிருந்தார்.


அப்போது அவரை பின்தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்றனர். விதிமுறைகளை மீறி வாகனத்தில் சென்றதாக திருமங்கலம் டிஎஸ்பி சரவணகுமார் மற்றும் போலீசார் திருமங்கலம் மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் வலையங்குளம் பகுதியில் கைது செய்தனர். அவரை தற்போது திருமங்கலம் அருகே தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டத்திற்கு வரும் வழியில் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த புதிய தமிழகம் கட்சியினர் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையில் படுத்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட 80 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More