Skygain News

ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி..!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சென்னை -வேலூர்- கிருஷ்ணகிரி ஆகிய தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வாகனங்களில் இருக்கும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர் .

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு லேசான மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொழிவுவானது நிலவியது இதில் வாலாஜாபேட்டை ஆற்காடு, உப்புபேட்டை கலவை, அல்லிகுளம், செங்காடு மோட்டூர் தகரகுப்பம் வள்ளும்பாக்கம் என மாவட்டத்தின் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது இதனால் புற்கள், செடிகள் மீது வெள்ளை போர்வையை போர்த்தியது போல பனி படர்ந்து காணப்பட்டது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More