Skygain News

தாத்தா ஆன முகேஷ் அம்பானி..!

தொழில் அதிபர் மற்றும் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி ஆவார். இவருக்கும், பிரமல் குழுமத்தின் தலைமை இயக்குனரான ஆனந்த் பிரமலுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமலுக்கும் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நிடா அம்பானி மற்றும் ஆனந்தின் பெற்றோர் அஜய் பிரமல், ஸ்வாதி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘நேற்று முன்தினம்(சனிக்கிழமை) இஷாவுக்கும், ஆனந்துக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தது. பெண் குழந்தைக்கு ஆதியா எனவும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரு குழந்தைகளும் நலமாக உள்ளனர்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குனராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More