தமிழ் திரையுலகில் இசைஞானியாக திகழ்பவர் இளையராஜா.இவரின் இசையில் மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு அவரின் இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இளையராஜாவிற்கு தற்போது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்று வரும் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜா இசையுலகிற்கு, இத்தனை வருடங்கள் ஆற்றிய சேவையை பாராட்டி பிரதமர் மோடி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.